மாநில செய்திகள்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ நெருங்குகிறது டீசல் விலையும் அதிகரிப்பு + "||" + Petrol will reach Rs 85 a liter

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ நெருங்குகிறது டீசல் விலையும் அதிகரிப்பு

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85-ஐ நெருங்குகிறது டீசல் விலையும் அதிகரிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85-ஐ நெருங்குகிறது.
சென்னை, 

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85-ஐ நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் 30 காசு உயர்ந்தது. அதேபோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை எகிற தொடங்கியது.

கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் 84 ரூபாய் 19 காசுகள் என்று இருந்தது. நேற்று மீண்டும் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது.

தொடர் விலை ஏற்றத்தை வைத்து பார்க்கும் போது இன்னும் ஓரிரு தினங்களில் பெட்ரோல் விலை ரூ.85-ஐ நெருங்கிவிடும் என்று பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

டீசலை பொறுத்தவரையில், தினசரி விலை நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது ரூ.57 (கடந்த ஆண்டு ஜூன் மாதம்) என்று இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதி ரூ.65-ஐ நெருங்கியது. விலை மேலும் அதிகரித்து கடந்த மே மாதம் 15-ந்தேதி ரூ.70-ஐ தொட்டது. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி டீசல் விலை ரூ.75-ஐ நெருங்கியது. இப்படியாக டீசல் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ரூபாய் 30 காசுகள் என டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று மட்டும் 24 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 77 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது.

பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருந்தாலும் பெட்ரோல், டீசல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் வரத்து குறைந்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை. ஏற்கனவே இருந்தது போலவே, வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை தங்கள் வாகனங்களில் நிரப்பி வருவதாகவே விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி ஏற்றி வரும் லாரிகள் ஏற்கனவே தங்களுடைய வாடகை கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஆனாலும் வியாபாரிகள் இன்னும் காய்கறி விலையில் மாற்றம் செய்யவில்லை. எப்போது வேண்டுமானாலும் காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.