மாநில செய்திகள்

எதிர்வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது மிகவும் அவசியம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுரை + "||" + Success is essential to the volunteers O.Panniriselvam, Edapadi Palaisamy advised

எதிர்வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது மிகவும் அவசியம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுரை

எதிர்வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது மிகவும் அவசியம் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவுரை
எதிர்வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது மிகவும் அவசியம் என்று கட்சி தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சென்னை,

எதிர்வரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவது மிகவும் அவசியம் என்று கட்சி தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க முடியும் என்பதை முதன்முதலாக நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா.

தமிழகத்தில் அண்ணா ஏற்படுத்திய புரட்சியின் விளைவாகத்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சிறப்பான ஆட்சிகளை நடத்திக்காட்ட முடிந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா அமைத்துத்தந்த அ.தி.மு.க. அரசு இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக வெற்றிப் பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது

நாட்டு மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் என்றால், அது அண்ணா எடுத்துரைத்த சமத்துவ, ஜனநாயக வழியில்தான் சாத்தியமாகும் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு உணர்ந்திருந்தார். அதன் காரணமாகத்தான், தான் ஆரம்பித்த மக்கள் இயக்கத்திற்கு ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று இயக்கத்தின் பெயரிலேயே அண்ணாவின் பெயரை இணைத்தார்.

அண்ணா காணவிரும்பி, அயராது உழைத்த புதிய தமிழ்ச் சமூகத்தைப் படைப்பதற்கு தனது ஆற்றல் முழுவதையும் செலவிட்டார் ஜெயலலிதா. அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கிவைத்த மக்கள் நலப்பணிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவுபடுத்தி, எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பெண்கள் பயன்பெறும் திட்டங்களை நாடு போற்றும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார் ஜெயலலிதா.

தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக அண்ணாவும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகுத்தளித்த பாதையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதியை அண்ணாவின் பிறந்தநாளில் தெரிவித்துக்கொள்கிறோம். அண்ணாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். இதுகுறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் இதுபற்றிய நல்ல செய்தி மத்திய அரசிடம் இருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றுவதற்கு கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று, அ.தி.மு.க. அரசைக் காத்து, மக்களிடையே நற்பெயர் பெற்று எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெறுவது மிகவும் அவசியம் என்பதை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.