தேசிய செய்திகள்

விஜய் மல்லையா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Vijay Mallya's case: Rahul Gandhi's charge against PM Modi

விஜய் மல்லையா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய் மல்லையா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றது தொடர்பாக பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவர் செல்வதற்கு முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக சமீபத்தில் கூறி இருந்தார்.


இதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, மல்லையா தப்பி செல்வதற்கு மத்திய அரசு உதவியதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்திப்பை மறைத்த அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதே நேரம் காங்கிரசின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து வரும் பா.ஜனதா, விஜய் மல்லையா காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது, அவர்களுக்கு கடிதம் எழுதியது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மல்லையா தப்பிச்சென்ற விவகாரத்தில் இருபெரும் கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் தீவிரமடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ. வெளியிட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸ் திருத்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்து இருக்கிறது. அதாவது ‘மல்லையாவை பார்த்தால் அவரை பிடித்து கொடுக்க வேண்டும்’ என விமான நிலையங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அனுப்பப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ், பின்னர் ‘மல்லையா வெளிநாடுகளுக்கு சென்றுவரும் தகவல்களை தெரிவிக்க வேண்டும்’ என திருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘லுக் அவுட் நோட்டீசை திருத்தியமைத்து, மல்லையா தப்பி செல்வதற்கு சி.பி.ஐ. உதவியிருக்கிறது. பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் சி.பி.ஐ. அதிகாரிகள். அப்படியிருக்கையில், மல்லையா போன்ற பிரபலமான ஒருவர் தொடர்பாக வெளியிடப்பட்ட நோட்டீஸ், பிரதமரின் அனுமதியின்றி திருத்தப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே விஜய் மல்லையாவை ‘ஜென்டில்மேன்’ என ராகுல் காந்தி கூறியதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. உத்தரபிரதேசத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் விஜய் மல்லையா சட்டவிரோத தொழிற்சாலை நடத்தி வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ராகுல் காந்தி வலியுறுத்தியதாகவும் அந்த கட்சியின் டுவிட்டர் தளத்தில் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறு விஜய் மல்லையா விவகாரத்தால் காங்கிரஸ், பா.ஜனதா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்துள்ளது பிரதமர் மோடி மகிழ்ச்சி
தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2. பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் ‘பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருக்கிறார்கள்’ - சிவசேனா தாக்கு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்து இருப்பதாக சிவசேனா கூறியுள்ளது.
3. விவாகரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் : லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் அடம்!
விவாகாரத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
4. ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் பிரதமர் மோடி
ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
5. புலி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: அரசு மீது சிவசேனா கடும் தாக்கு
புலி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசை சிவசேனா கடுமையாக தாக்கி பேசியுள்ளது.