தேசிய செய்திகள்

கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல் + "||" + Goa Chief Minister Manohar Parrikar to travel to Delhi today for medical treatment

கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல்

கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு என தகவல்
கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பானஜி,

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து 6-ம் தேதி நாடு திரும்பினார். 

நேற்று மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரிக்கர் உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் அவரால் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார் என்பதால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பா.ஜ.க மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும், இதற்காக வரும் திங்கள் கிழமை மத்தியக்குழு  கோவா செல்ல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, மருத்துவ மேல்சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் டெல்லி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.