தேசிய செய்திகள்

ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் வாலிபர்கள் + "||" + Venom highs men in India get deadly snakes to bite their tongues for a buzz

ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் வாலிபர்கள்

ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் வாலிபர்கள்
விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் பணக்கார வாலிபர்கள்.
ராஜஸ்தானை சேர்ந்த பணக்கார இளைஞர்கள் இரண்டு பேர் ராஜநாகத்தின் விஷத்தை போதைக்காக பயன்படுத்திய தகவல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ராஜ நாகம் ஒருமுறை கடித்தால் 20 பேரைக் கொல்லக்கூடிய அளவுக்கு விஷத்தன்மை வாய்ந்த நஞ்சு வெளியாகும். அத்தகைய நஞ்சை கக்கக்கூடிய ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளனர். அதாவது ராஜ நாகத்தைப் பிடித்து அவர்களின் நாக்கில் கடிக்க வைத்து அந்த நஞ்சை உடலில் ஏற்றிக் கொள்வார்களாம்.

ராஜ நாகத்தின் நஞ்சு எந்தப் போதைப் பொருளாலும் கொடுக்க முடியாத மயக்கத்தைக் கொடுப்பதாக அந்த இளைஞர்கள் ஆராய்ச்சியாளர்களிடம் கூறியுள்ளனர். அவர்களின் வாக்குமூலம் ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரண்டு இளைஞர்களும் தற்போது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. மனைவி விற்பனைக்கு ஒரு விசித்திரமான விளம்பரம்
தனியார் நிறுவனம் ஒன்று, மனைவி விற்பனைக்கு என்கிற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
2. மாற்று திறனாளி நடனக் கலைஞர்; பாரீசில் இரண்டு இடங்களில் நடனம் ஆட அனுமதி மறுப்பு
மாற்று திறனாளி நடனக் கலைஞர் பாரீசில் இரண்டு இடங்களில் நடனம் ஆட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
3. குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் போரிட்ட நாய் -வீடியோ
தன் குட்டிகளை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து பாம்புடன் சண்டைபோட்ட நாயின் பாசப்போராட்டம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
4. கொலை செய்ய முயற்சித்ததாக ரஷ்ய அதிபர் மீது பிரபல மாடல் அழகி குற்றசாட்டு
ரஷ்ய அதிபர் எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார் என பிரபல மாடல் அழகி குற்றம் சாட்டியுள்ளார்.
5. மனிதர்களைப் போன்றே சிகரெட் பிடித்து வட்ட வட்டமாக புகைவிடும் சிம்பன்ஸி
வடகொரியாவில் மனிதர்களைப் போன்றே சிம்பன்ஸி குரங்கு சிகரெட் பிடிப்பதால் அதைப் பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் அந்த பூங்காவில் அலை மோதுகிறது.