மாநில செய்திகள்

அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும் -ஜக்கி வாசுதேவ் + "||" + In the next 10 years We need to change our nation into a clean nation Jake Vasudev

அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும் -ஜக்கி வாசுதேவ்

அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும் -ஜக்கி வாசுதேவ்
அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும் என கோவை ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதன் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கோவை ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

 நாட்டை தூய்மையாக வைத்திருக்காவிட்டால், அடுத்த தலைமுறைக்கு பிரச்னை. அடுத்த 10 ஆண்டுகளில் அனைவரும் நம் நாட்டை நாடி வரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இது தேசத்தின் இயக்கம் என்றார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பண்பு நம் பாரத கலாச்சாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பிரிட்ஷ் தொல்லியல் துறையினர் அங்கு டிரைனேஜ் வசதி இருந்துள்ளதை கண்டு வியந்துள்ளனர். 5000 வருடங்களுக்கு முன்பு இதுபோன்று வேறு எந்த கலாச்சாரத்திலும் இந்த டிரைனேஜ் முறை உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பல்வேறு படையெடுப்புகள் காரணமாக நமது தேசம் 20, 30 வருடங்களுக்கு ஏழ்மை நிலையில் இருந்தது. இதனால், இந்த பண்பு மறைந்து போனது.

தற்போதும் நம் தேசத்தில் இருப்பவர்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் போதிய கவனம் செலுத்தி வருவதை நீங்கள் கவனிக்கலாம். காலையில் குளித்து முடித்த பிறகு தான் உணவு அருந்துவதோ அல்லது வேறு பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பண்பு மறைந்து போயுள்ளது.

இந்நிலையில், இந்த பண்பை மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்ளவும் புதிய கழிப்பறைகள் கட்டவும் ரூ.60 கோடியை ஒதுக்கி உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் 37 சிறு நகரங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் சிட்டிசன் கமிட்டிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 வருடங்களில் நம் தேசத்தை தூய்மையான தேசமாக மாற்ற வேண்டும். 

இவ்வாறு சத்குரு கூறினார்.