தேசிய செய்திகள்

”கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக” பிரதமர் மோடியிடம் கூறிய தமிழக பெண் + "||" + Building a toilet is not for subsidy To honor " TamilNadu women told PM Modi

”கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக” பிரதமர் மோடியிடம் கூறிய தமிழக பெண்

”கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல  மானத்திற்காக” பிரதமர் மோடியிடம்  கூறிய தமிழக பெண்
கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல; மானத்திற்காக என சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக பல்வேறு மாநிலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களின் மக்களுடன்  மோடி உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து சேலம் மாவட்டம் தலைவாசல் மக்களுடன் வணக்கம் என்று கூறி மோடி உரையாடினார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் சிறப்பு குறித்து சுமதி என்ற பெண் பிரதமருக்கு தமிழில் எடுத்துரைத்தார். அப்போது பேசிய அந்தப் பெண்மணி, ‘தூய்மை இந்தியா’ திட்டம் வருவதற்கு முன் தங்களது கிராமத்தில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை போக்கி வந்ததாகவும், தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் கழிவறைக் கட்டி பயன்படுத்துவதால் புது உற்சாகம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல  மானத்திற்காக என கூறினார்.

மேலும், சேலம் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற தாங்கள் பாடுபடுவோம் எனக் கூறினார். இதனையடுத்து பேசிய பிரதமர், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் தமிழகப் பெண்களின் ஆர்வத்தை பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என்று தென்கொரிய வர்த்தக கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
2. பிரதமர் மோடி அமேதி தொகுதியில் மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம்
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் பிரதமர் மோடி வருகிற மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
3. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
5. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...