உலக செய்திகள்

பிரதமர் இல்லத்தினை தவிர்க்கும் இம்ரான் கான் முடிவால் அரசுக்கு ரூ.185 கோடி சேமிப்பு + "||" + Khan staying out of PM house will save money worth Rs1.85 billion

பிரதமர் இல்லத்தினை தவிர்க்கும் இம்ரான் கான் முடிவால் அரசுக்கு ரூ.185 கோடி சேமிப்பு

பிரதமர் இல்லத்தினை தவிர்க்கும் இம்ரான் கான் முடிவால் அரசுக்கு ரூ.185 கோடி சேமிப்பு
பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.

அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார்.  இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.

இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும்.

பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் இல்லத்தில் தங்கவோ அல்லது வி.வி.ஐ.பி. அந்தஸ்தினை அனுபவிப்பதோ இல்லை என பல முறை பேட்டி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கான் தெளிவுப்பட கூறியுள்ளார்.

இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் எளிமைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் ₹.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ₹.70 கோடி செலவிடப்படும்.

உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு ₹.15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ₹.1.5 கோடியும் செலவிடப்படும்.

இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தும்.


தொடர்புடைய செய்திகள்

1. பஹவல்பூரில்தான் மசூத் அசார் உள்ளான், பிடித்துக்கொள்ளுங்கள் இம்ரான்கானுக்கு பஞ்சாப் முதல்வர் பதில்
புல்வாமா தாக்குதலில் ஆதாரம் கோரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலளித்துள்ளார்.
2. நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயார் இம்ரான்கான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதியான உறவுக்கு நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு தயார் என இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
3. இம்ரான்கான் பிரதமரெல்லாம் கிடையாது, வெறும் பியூன்தான் - சுப்பிரமணியசாமி
இம்ரான்கான் பிரதமரெல்லாம் கிடையாது வெறும் பியூன்தான் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
4. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.
5. ரேகம் கான் சொல்லும் ‘ஐந்து குழந்தைகள்’ ரகசியம்
புதிதாக பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிற இம்ரான் கானுக்கு பல தலைவலிகள். அவற்றில், அவரது முன்னாள் மனைவி ரேகம் கானும் ஒருவர்.

ஆசிரியரின் தேர்வுகள்...