தேசிய செய்திகள்

கால் சென்டரில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரம்; 2 பேர் கைது + "||" + Two more held in woman thrashing video case

கால் சென்டரில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரம்; 2 பேர் கைது

கால் சென்டரில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரம்; 2 பேர் கைது
போலீஸ் அதிகாரி மகன் கால் சென்டரில் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

டெல்லி காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ கடந்த இரண்டாம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இளம்பெண்ணை ரோஹித் முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளி கொடூரமான முறையில் தாக்கிய காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன. இளம்பெண்ணை தோமர் தாக்கியதை அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

ரோஹித் சிங் தோமருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. அவனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணிற்கு இந்த வீடியோ சென்றுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக களமிறங்கிய அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

துணிச்சலாக இந்நடவடிக்கையை எடுத்த அப்பெண் அவனுடனான திருமணத்தையும் நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் வீடியோவில் இடம்பெற்று இருந்த பாதிக்கப்பட்ட பெண் நேற்று காவல் நிலையம் சென்று தன்னுடைய அறிக்கையை தெரிவித்துள்ளார். ரோஹித் என்னை அவனுடைய நண்பரின் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டு கொண்டான்.

அங்கு சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் என்னை கொடூரமான முறையில் தாக்கினான். காவல் துறையிடம் செல்வேன் என்று கூறிய போது விளைவுகள் கடினமாக இருக்கும் என்று மிரட்டி என்னை கொடூரமான முறையில் தாக்கினான் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காவல்துறை விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.  அதன்படி நேற்றிரவு குற்றவாளியான ரோஹித் சிங் தோமர் கைது செய்யப்பட்டான்.

குற்றவாளியின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  கடந்த மாதம் வரை கால் சென்டரில் வேலை செய்து வந்த அவன் வேலையின்றி இருந்து வந்துள்ளான்.

இந்த நிலையில், கால் சென்டரின் உரிமையாளர் அலி ஹசன் மற்றும் அங்கு எடுபிடி வேலை செய்யும் மற்றொருவன் என மற்ற 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
புதுக்கோட்டைவிசைப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
2. வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
3. சாமி ஊர்வலத்தின்போது தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 3 பேர் கைது
திருவெண்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. துறையூர் அருகே மதுபானம் தயாரித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
மதுபானம் தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
5. திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...