தேசிய செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு: 2-வது நாளாக பிரதமர் மோடி ஆலோசனை + "||" + PM Modi Meets Amid Sliding Rupee, Rising Fuel Prices

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு: 2-வது நாளாக பிரதமர் மோடி ஆலோசனை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு: 2-வது நாளாக  பிரதமர் மோடி ஆலோசனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பெட்ரோல் விலையை போல வாகன ஓட்டிகளின் வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. 

நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பொருளாதார பிரச்சினைகள் குறித்த 2 நாள் ஆய்வுக்கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கினார்.  2-வது நாளாக இன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.  ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.