மாநில செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் மு.க.ஸ்டாலின் + "||" + MK Stalin to celebrate Karunanidhi's birthday as Classical Day

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம்  மு.க.ஸ்டாலின்
கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

விழுப்புரத்தில் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். முத்தமிழ் கலைஞர் என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும். அறக்கட்டளை மூலம் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்கப்படும். 

 மத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில்  தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா?  என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். கருணாநிதி மகன் சாதித்தான் என்பதை நிரூபிக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
2. பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த சூளுரை ஏற்போம் : தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த சூளுரை ஏற்போம் என்று கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. தர்மபுரி பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தர்மபுரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காயமடைந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
4. ‘பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம்’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம் என்று பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
5. ஜனநாயக போர்: ‘பா.ஜ.க., அ.தி.மு.க. அரசை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம்’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்
‘பா.ஜ.க., அ.தி.மு.க. அரசை ஒரே நேரத்தில் வீழ்த்துவோம்’ என்று பெரம்பலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.