தேசிய செய்திகள்

மல்லையா விவகாரம்; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ. மறுப்பு + "||" + CBI refutes Rahul's allegation that its senior official weakened Mallya's "Look Out" notice

மல்லையா விவகாரம்; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ. மறுப்பு

மல்லையா விவகாரம்; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ. மறுப்பு
விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. இயக்குனர் பலவீனப்படுத்தினார் என்ற ராகுலின் குற்றச்சாட்டை சி.பி.ஐ. மறுத்துள்ளது.
புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி சமூக ஊடகமொன்றில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, விஜய் மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து உள்ளார்.  இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது.

பஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார்.  சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது என தெரிவித்துள்ளார்.

ராகுலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சி.பி.ஐ. அமைப்பு இதுபற்றி வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், சி.பி.ஐ.யின் மூத்த அதிகாரிக்கு எதிராக சில தனி நபர்கள் அடிப்படையற்ற சில குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.  விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை திருத்தும் முடிவு சி.பி.ஐ.யால் எடுக்கப்பட்டது.  ஏனென்றால் அந்த நேரத்தில் மல்லையாவை கைது செய்வதற்கு போதிய அடிப்படை விசயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

இந்த முடிவு முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது.  குற்றச்சாட்டு கூறுவதுபோல் சி.பி.ஐ. அதிகாரியால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி சென்ற ஒரு மாதத்திற்கு பின்பே அவர்களுக்கு எதிரான பஞ்சாப் நேசனல் வங்கியின் புகார் எங்களுக்கு கிடைக்கப்பெற்றது என்றும் அதில் தெரிவித்து உள்ளது.

ஆகவே, அவர்கள் வெளிநாடு தப்பி சென்ற விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரி எவரும் ஈடுபட்டனரா? என்ற கேள்வியே எழுவதற்கு இடமில்லை.  வங்கியின் புகார் கிடைத்தவுடன் உடனடியாக சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து கடிதம்
எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
2. அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
3. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்
ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
4. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா? பிரகாஷ் ராஜ் பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
5. விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி
விவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.