கிரிக்கெட்

ஆசிய கோப்பை போட்டி; இலங்கை வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம் + "||" + Asia Cup; Bangladesh set target of 262 to win Sri Lanka

ஆசிய கோப்பை போட்டி; இலங்கை வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

ஆசிய கோப்பை போட்டி; இலங்கை வெற்றி பெற 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்களை வங்காளதேசம் இலக்காக நிர்ணயித்துள்ளது.
துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணியில் லிட்டன் (0), அல் ஹசன் (0), மிதுன் (63), மகமுதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் ரஹீம் 144 (11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) என அடித்து விளையாடி ரன்களை குவித்து ஆட்டமிழந்துள்ளார்.  அவருடன் விளையாடிய இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் இலங்கை அணி வெற்றி பெற 262 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.