சினிமா செய்திகள்

”திராவிட பிள்ளையார் ” நடிகை கஸ்தூரி கிண்டல் + "||" + Actress Kasturi Tease

”திராவிட பிள்ளையார் ” நடிகை கஸ்தூரி கிண்டல்

”திராவிட பிள்ளையார் ”  நடிகை கஸ்தூரி கிண்டல்
நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி டுவிட்டரில் கருத்து கூறி வருகிறார்.
சென்னை,

நடிகை கஸ்தூரி  சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி டுவிட்டரில் கருத்து கூறி வருகிறார். சமூக, அரசியல் விஷயங்கள் குறித்து உடனுக்குடன் கருத்துகள் பதிவிடுகிறார். இதனால் அவருக்கு வரவேற்பும், எதிர்ப்புகளும் வருகிறது. சிலநேரங்களில் ரசிகர்களுடன் காரசாரமான விவாதங்களிலும் அவர் ஈடுபடுவது உண்டு.

இந்தநிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்திக்கு திமுக வாழ்த்து தெரிவித்துள்ளது  போல போஸ்டர் ஒன்றை பதிவிட்டு, அய்யய்யோ இப்படி குழப்புறீங்களே!! என குறிப்பிட்டு திராவிட பிள்ளையார் என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் இந்த போஸ்டரையும் படம் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.