தேசிய செய்திகள்

கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி + "||" + Goa Chief Minister Manohar Parrikar has been admitted to Delhi AIIMS hospital

கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62 ) கணைய அழற்சி நோயால் அவதியுற்று வருகிறார்.

இதற்காக அவர் அமெரிக்கா சென்று அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த 7–ந் தேதி கோவா திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் தனது வீட்டில் இருந்து கொண்டு அரசு பணிகளை கவனித்து வந்தார்.


கடந்த வியாழக்கிழமையன்று, திடீரென அவரது உடல் நிலை பாதித்ததால் கோவா கேண்டோலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க முடிவானது.

இதையடுத்து டெல்லிக்கு இன்று அவர் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்து நேராக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.