கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காள தேச அணி அசத்தல் வெற்றி + "||" + Asian Cup cricket: wins Bangladesh team

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காள தேச அணி அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காள தேச அணி அசத்தல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி அசத்தல் வெற்றிபெற்றது. #SLVsBAN
துபாய், 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்கள் சரியாக சோபிக்காத நிலையில், அந்த அணியின் முசிப்கூர் ரஹிம், முகமது மிதுன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் கனிசமாக உயர்ந்தது. அதில் மிதுன் 63(68) ரன்களிலும், ரஹிம் 144 (150) ரன்களிலும் வெளியேற, இறுதியில் வங்கதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக லசித் மலிங்கா 4 விக்கெட்டுகளும், தனஞ்ஜெயா டி சில்வா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் உபுல் தரங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். வங்கதேச அணியின் அபாரமான பந்துவீச்சின் மூலம், மெண்டிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், உபுல் தரங்கா 27(16) ரன்களும், தனஞ்ஜெயா (0), குசால் பேரேரா 11(24) ரன்னிலும், தசுன் சானகா 7(22) ரன்னிலும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 16(34) ரன்னிலும், திஷாரா பேரேரா 6(9) ரன்னிலும், சுரங்கா லக்மல் 20(25) ரன்னிலும், தில்ருவன் பேரேரா 29(44) ரன்னிலும், அமிலா அபோன்சோ 4  ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

முடிவில் லசித் மலிங்கா 3 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 35.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ருவன் பேரேரா 29 ரன்களும், உபுல் தரங்கா 27 ரன்களும் எடுத்தனர். வங்க தேச அணியின் சார்பில் மோர்டசா, ரகுமான், ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ருபெல் ஹொசைன், மொசாட்டக் ஹொசைன், சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன்? - இந்திய கேப்டன் கோலி விளக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN
3. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தியாவிற்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 223 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.#AsiaCup
4. ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. #AsiaCup
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேச அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #PAKvsBAN

ஆசிரியரின் தேர்வுகள்...