மாநில செய்திகள்

தலைமறைவாகவில்லை வீட்டில் தான் இருக்கிறேன்- கருணாஸ் எம்.எல்.ஏ + "||" + Not hiding I'm at home Karunas MLA

தலைமறைவாகவில்லை வீட்டில் தான் இருக்கிறேன்- கருணாஸ் எம்.எல்.ஏ

தலைமறைவாகவில்லை வீட்டில் தான் இருக்கிறேன்- கருணாஸ் எம்.எல்.ஏ
நான் தலைமறைவாகவில்லை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

சென்னை:

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான் தலைமறைவாகவில்லை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன் என தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு கருணாஸ் எம்.எல் ஏ பேட்டி அளித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி
இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார். பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார்.
2. சபாநாயகர் தனபாலை நீக்குவது தொடர்பாக கருணாஸ் மனு: சட்டசபை கூடும்போது திமுக பரிசீலிக்கும்- தி.மு.க எம். எல்.ஏ
சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர். #DMK #AIADMK
3. ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலை
ஜாமீன் கிடைத்ததையடுத்து வேலூர் சிறையில் இருந்து கருணாஸ் எம்.எல்.ஏ விடுதலை செய்யப்பட்டார்.
4. கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுப்பு
கருணாஸ் எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
5. எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான்- கருணாஸ் எம்.எல்.ஏ
எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது, ஒருமையில் பேசியது தவறுதான் என கருணாஸ் எம்.எல்.ஏ கூறி உள்ளார். #Karunas