இயற்பியலுக்கான நோபல் 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது


இயற்பியலுக்கான நோபல்  3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 2 Oct 2018 3:37 PM IST (Updated: 2 Oct 2018 3:37 PM IST)
t-max-icont-min-icon

இயற்பியலுக்கான நோபல் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. #NobelPrize


ஸ்டாக்ஹோம் 

மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இன்று இயற்பியலுக்கான நோபல்  3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த  ஜிரார்டு மவ்ரு , மற்றும் கனடாவைச் சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட். ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு லேசர் இயற்பியல் துறையில் முன்மாதிரி கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story