சுனாமி தாக்குதலுக்கு ஆளான இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுகிறது


சுனாமி தாக்குதலுக்கு ஆளான இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுகிறது
x
தினத்தந்தி 3 Oct 2018 8:33 AM GMT (Updated: 3 Oct 2018 8:33 AM GMT)

சுனாமி தாக்குதலுக்கு ஆளான இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடித்து சிதறியது.

 
இந்தோனேசியாவின் சுலவேசி என்னும் தீவுப்பகுதியில் சமீபத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5-ஆக பதிவாகியிருந்தது.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுலவேசி தீவின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி பலமாக தாக்கியது. சுனாமி அலைகள் 20 அடி உயரத்துக்கு எழும்பி ருத்ர தாண்டவம் ஆடியதால், ஏராளமான மக்கள் பலியாகினர். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக தற்போது வரை 1350-பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த பேரழிவு காரணமாக 24 கோடி  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இந்தோனேசியாவில் இன்று ஒரு மணி நேரத்தில் இரண்டாவது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. நேற்று  156 முறை வெடிப்பு ஏற்பட்டது, மணல் மற்றும் சாம்பல்லை உமிழ்ந்து வருகிறது. 

இந்நிலையில், அதிகளவிலான நிலநடுக்கும், எரிமலை மற்றும் சுனாமி தாக்குதல் நடைபெறும் பகுதியாக இந்தோனேசியா திகழ்கிறது. இங்கு ஆண்டொன்றுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி மிகப் பெரிய இயற்கை பேரழிவு காரணமாக இந்தோனேசியா அதிலிருந்து மீள்வதற்கு தவித்து வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் சார்பில் இந்தோனேசியாவிற்கு 7 கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Next Story