தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் + "||" + Cabinet approves payment of productivity linked bonus equivalent to 78 days’ wages for financial year 2017-18 for all eligible non-gazetted Railway employees

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.

இந்த முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.  ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தொடரும் கடும் குளிர்: 24 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனிமூட்டத்துடன் கடும் குளிரும் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக 24 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.