உலக செய்திகள்

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நிக்கி ஹாலே போட்டியிட வாய்ப்பு? + "||" + Nikki Haley is going to run against Mike Pence in 2024, not against Donald Trump in 2020

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நிக்கி ஹாலே போட்டியிட வாய்ப்பு?

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நிக்கி ஹாலே போட்டியிட வாய்ப்பு?
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியை நிக்கி ஹாலே நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவியை நிக்கி ஹாலே நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

அவரது பதவி விலகலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். நிக்கி ஹாலே ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. அவரது முடிவு, அமெரிக்காவில் ஆச்சரிய அலைகளை உருவாக்கி உள்ளது.

46 வயதான நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். அவருடைய முன்னோர்கள், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ஹாலே, இதற்கு முன்பு, தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற நான்கே நாட்களில், நிக்கி ஹாலே ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். டிரம்ப் அரசில், மிக மூத்த இந்திய வம்சாவளி அதிகாரியாகவும் அவர் திகழ்ந்து வந்தார்.

அரசியலில் நுழைவதற்கு முன்பு, தனது குடும்ப வர்த்தகத்தை கவனித்து வந்தார். அவருடைய கணவர் மைக்கேல், ராணுவ கேப்டன் ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில்  அமெரிக்க தூதர் பதவியை நிக்கி ஹாலே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என நிக்கி ஹாலே விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க தூதர் பதவியை நிக்கி ஹாலே ராஜினாமா செய்தது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில்,

நிக்கி ஹாலே ஒரு சிறந்த நிர்வாகத் திறமை உடையவர், வெளியுறவுக் கொள்கை சார்ந்த அறிவுத்திறன், அனைத்து தரப்பாலும் ஏற்கக் கூடியவர் ஆகிய பிரிவுகளில், குடியரசுக் கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக நிக்கி ஹாலே உருவாவது, அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முக்கிய அச்சுறுத்தலாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி, 2024-ம் ஆண்டு நிக்கி ஹாலே அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், இடைப்பட்ட 6 ஆண்டு காலத்தில், நிக்கி பொதுவாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டு மக்கள் மனதில் இருந்து நீங்காமல் இருப்பதும் சவாலானது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.