உலக செய்திகள்

சவுதி பத்திரிக்கையாளர் மாயம் டொனால்டு டிரம்ப் தலையிட காதலி செங்கிஸ் கோரிக்கை + "||" + Fiancée of missing Saudi journalist Jamal Khashoggi to Trump: Please help

சவுதி பத்திரிக்கையாளர் மாயம் டொனால்டு டிரம்ப் தலையிட காதலி செங்கிஸ் கோரிக்கை

சவுதி பத்திரிக்கையாளர் மாயம் டொனால்டு டிரம்ப் தலையிட காதலி செங்கிஸ் கோரிக்கை
துருக்கி சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி மாயமானதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலையிட கோரிக்கை வைத்து உள்ளார்.
வாஷிங்டன்

சவுதி அரேபியாவின் பிரபல ஊடகவியலாளர்  துபாய் ஜமால் கஷோகி (59). சவுதி அரசின் மக்கள் விரோத போக்கை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தவர் கஷோகி. இதனால் சவுதி அரசாங்கம் அவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் துருக்கி சென்று காதலியுடன் வாழ்ந்து உள்ளார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள சவுதி அரேபியா நாட்டின் துணை தூதரகத்திற்கு சென்ற  கஷோகி, அதன் பின்னர் மாயமானதாக தகவல் வெளியானது. கசோக்கி தனது திருமணத்திற்கான ஆவணங்களை தமது தூதரகத்தில் இருந்து பெற உரிய அனுமதி பெற்று சென்றதாக கூறப்படுகிறது.

தூதரகத்தின் வெளியே அவரது வருங்கால மனைவி அவருக்காக காத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. தூதரக அலுவகம் சென்ற கஷோகி வெகுநேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது வருங்கால மனைவி ஹாடிஸ் செங்கிஸ் உடனடியாக துருக்கி போலீசாருக்கு நடந்த சம்பவங்களை புகாராக தெரிவித்துள்ளார்.  நடந்த இச்சம்பவம் தொடர்பாக துருக்கி போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அதிரவைக்கும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது. சவுதி அரசின் மக்கள் விரோத போக்கை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தவர் கசோக்கி. இதனால் சவுதி அரசாங்கம் அவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கஷோகி தமது துருக்கி நாட்டு காதலியை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, சவுதி தூதரகம் சென்றுள்ளார். ஆனால் சவுதி தூதரகத்தின் உள்ளேயே கஷோகி கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கி போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைவு செய்திருக்கலாம் எனவும் துருக்கி போலீசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும், நடந்தவற்றை துல்லியமாக பதிவு செய்துள்ளதாகவும், அந்த ஆதாரங்களை துருக்கியில் இருந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கசோக்கி சவுதி தூதரகம் சென்ற அதே நாளில் 2 சிறப்பு விமானத்தில் 15 சவுதி அரேபியர்கள் துருக்கி நாட்டுக்கு வந்ததாகவும், அவர்களே ஊடகவியலாளர் கஷோகியை கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என துருக்கி ஜனாதிபதி உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குள் கஷோகி செல்லும் வீடியோ காட்சிகளை துருக்கி  வெளியிட்டுள்ள நிலையில் ஜமால் மாயமான விவகாரத்தில்  நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டன்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் கூறும்போது, "இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்ற கஷோகிக்கு என்ன ஆனது? அவர் தற்போது எங்கு இருக்கிறார்? என்று சவுதி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினோம்.

உலகெங்கிலும் பத்திரிகையாளர்களுக்கு அதிகரித்து வரும் வன்முறைகள் கருத்துச் சுதந்திரத்திற்கு  எதிரான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. ஒருவேளை ஊடகங்கள் கூறுவது போல் (ஜமாலை சவுதி அரசு கொலை செய்திருக்கலாம்) அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டால் இதனை நாங்கள் வேறு விதமாக அணுகுவோம்'' என்று கூறியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கம் பக்க ஆசிரியரான ஃப்ரெட் ஹைட்டட் கூறும் போது  துருக்கி அல்லது சவுதி அரேபியா காணாமற்போன பத்திரிகையாளர் கஷோகி  உயிருடன்  சவுதி தூதரகத்தை விட்டுச்சென்றதாக நிரூபிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கஷோகிக்கியின் காதலி ஹாடிஸ் செங்கிஸ் இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டிரபம்ப் தலையிட கேட்டு கொண்டு உள்ளார்.

சவுதி அரேபியா, குறிப்பாக அரசர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோர் எனது இதே நிலையில் இருப்பார்கள்  மற்றும் தூதரகத்திலிருந்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிடவும் "அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
2. கொல்லப்பட்ட சவுதி அரேபிய பத்திரிகையாளர் ‘ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்க வேண்டும்’ - மகன்கள் கோரிக்கை
கொல்லப்பட்ட சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்க வேண்டும் என மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.