மாநில செய்திகள்

"ஆக்கிரமிப்புகளால் மீண்டும் சென்னையில் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு"- நித்யானந்த் ஜெயராமன் + "||" + With the occupations, the chance of flooding in Chennai again Nithyanand Jayaraman

"ஆக்கிரமிப்புகளால் மீண்டும் சென்னையில் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு"- நித்யானந்த் ஜெயராமன்

"ஆக்கிரமிப்புகளால் மீண்டும் சென்னையில் பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு"- நித்யானந்த் ஜெயராமன்
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
 சென்னை

நீரியல் வல்லுனர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் சார்பில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்னர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எண்ணூர் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஆய்வின் முடிவில் கிடைத்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். 

எண்ணூர் துறைமுகம் அருகே 500 ஏக்கர் நீர்நிலை பகுதிகளை தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த ஆக்கிரமிப்புகளால், விரைவில் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நித்யானந்த் ஜெயராமன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.