தேசிய செய்திகள்

ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசு; எதிர்ப்புக்கு தண்டனை: காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Cong alleges govt 'manipulated' Rafale deal process

ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசு; எதிர்ப்புக்கு தண்டனை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசு; எதிர்ப்புக்கு தண்டனை:  காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் அடிபணிந்த அதிகாரிகளுக்கு பரிசும், எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது. 

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பு நிர்வாகி ஜெய்பால் ரெட்டி கூறும்பொழுது, ரபேல் போர் விமான ஒப்பந்தம் முதலில் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.  பின் அமைச்சரவை குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டது.  அதன்பின்னர் முடிவானது.

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வளைந்து கொடுக்காத இணை செயலாளர் அளவிலான அதிகாரி தண்டிக்கப்பட்டார்.  அந்த பதவிக்கு புதிய அதிகாரி கொண்டு வரப்பட்டார்.

இந்த ஒப்பந்த நடைமுறையை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஒழிக்கப்பட்டனர், நசுக்கப்பட்டனர், தண்டிக்கப்பட்டனர், பணி உயர்வு அளிக்கப்பட்டனர்.  ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறையும் மோசடியானவை என அவர் கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியா வரலாற்றில் இதுபோன்று நடந்ததே இல்லை.  பணிந்து போன அதிகாரிகளுக்கு பின்னர் வெகுமதி வழங்கப்பட்டது.  எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம் : ராகுல்காந்தி தொடர்ந்து பொய் பேசுகிறார்-பியுஷ்கோயல்
ரபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து பொய் பேசு வருகிறார் என மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கூறி உள்ளார்.
2. ரபேல் விவகாரத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல் - மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் மனு
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.
3. ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
4. ரபேல் விவகாரம்: விசாரணையைத் தவிர வேறு வழியில்லை அருண் ஜெட்லி கருத்திற்கு ப.சிதம்பரம் டுவிட்
ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
5. ரபேல் விவகாரம் பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி - காங்கிரஸ் விமர்சனம்
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி போடுகிறார்கள் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.