தேசிய செய்திகள்

காஷ்மீர்: 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு + "||" + Kashmir: In the 2nd phase of the local elections, 31.3 percent turnout

காஷ்மீர்: 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு

காஷ்மீர்: 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானது.
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்த நிலையில் இன்று 2–ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் மொத்தம் 263 நகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.


பிரதான கட்சிகளான தேசிய மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்ததால் வாக்காளர்களிடம் ஆர்வம் காணப்படவில்லை. மேலும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலாலும் பலர் வாக்களிக்க வரவில்லை. இதனால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் பெரும்பாலான வார்டுகளில் குறைவான வாக்குகளே பதிவானது. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் உள்ள 2.20 லட்சம் வாக்காளர்களில் வெறும் 3.4 சதவீதத்தினரே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். எனினும் ஜம்முவில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.

இந்த தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. ராம்பான் மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசாத் சிங் ராஜு (வயது 62) என்ற பா.ஜனதா வேட்பாளர், ஓட்டுப்போடுவதற்காக வந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட பா.ஜனதாவினர் அதிர்ச்சியடைந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொலை
காஷ்மீரில், பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
3. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.
4. காஷ்மீரில் கடும் குளிர் - தால் ஏரி உறைந்தது
காஷ்மீரில் கடும் குளிர் காரணமாக தால் ஏரி உறைந்தது.
5. காஷ்மீரில் மரணம்: 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம்
காஷ்மீரில் மரணமடைந்த திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.