உலக செய்திகள்

கென்யா: பஸ் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு + "||" + Kenya: Bus collapses accident - Death toll rises to 51

கென்யா: பஸ் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

கென்யா: பஸ் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு
கென்யாவில் பஸ் கவிழ்ந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 51 ஆக உயர்ந்துள்ளது.
நைரோபி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் நெடுஞ்சாலைகள் மிகவும் ஆபத்தானவை, சாலைப் போக்குவரத்துக்கு உலகளவில் மோசமான நாடுகளில் ஒன்று கென்யா என்று உலக சுகாதார நிறுவனம் முத்திரை குத்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் மிகா என்ற இடத்தில் ஒரு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 36 பேர் பலியாகினர்.


இதேபோன்றதொரு கோர விபத்து இன்றும் நேரிட்டது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து கிஷ்மு நோக்கி இன்று அதிகாலையில் ஒரு பஸ், 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. பயணிகள் மரண ஓலமிட்டனர்.

இந்த கோர விபத்தில் 40 பயணிகள் உயிரிழந்து விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கென்யாவின் போலீஸ் தலைவர் ஜோசப் போய்னட் கூறினார்.

விபத்து நேர்ந்தபோது பேரொலி எழுந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர். கென்யாவில் சராசரியாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர், சாலை விபத்துகளில் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு - இத்தாலி பெண் ஊழியர் கடத்தல்
கென்யாவில் வணிகமையம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் இத்தாலி பெண் ஊழியர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டார்.
2. கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது
கென்யாவில் 7 மாத கர்ப்பமான காதலியை கொலை செய்த கவர்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.