உலக செய்திகள்

பாகிஸ்தான்: உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம் + "||" + Pakistan: Asim Munir appointed as intelligence chief

பாகிஸ்தான்: உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்

பாகிஸ்தான்: உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம்
பாகிஸ்தானில் உளவுத்துறை தலைவராக ஆசிம் முனீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அதிகாரமிக்க உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைவராக பதவி வகித்து வந்தவர், லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் கடந்த 1-ந் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரது இடத்துக்கு இம்ரான்கான் அரசு யாரை நியமிக்கப்போகிறது என்ற பெரும் பரபரப்பு நிலவியது.


இந்த நிலையில், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது.

இந்த நிலையில்தான் ஆசிம் முனீர், உளவுத்துறை தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி பதவியிலும் இருந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இவருக்கு ‘ஹிலால் இ இம்தியாஸ்’ என்ற பாகிஸ்தானின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 145 ரன்னில் சுருண்டது.
2. பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாம்: பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது தெற்காசியா அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
3. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றது. மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியும் எழுச்சி பெற்றுள்ளது.
4. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்
பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
5. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.