தேசிய செய்திகள்

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம் + "||" + Tushar Mehta appointed as solicitor general

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம்
சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசின் தலைமை வக்கீல்கள் வரிசையில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்தபடியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி உள்ளது. இந்த பதவியில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள மூத்த வக்கீல் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.


மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அரசு ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து 2020-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிவரை இப்பதவியில் இருப்பார்.

துஷார் மேத்தா, பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக கருதப்படுபவர். முக்கியமான பல்வேறு வழக்குகளில் மத்திய அரசுக்காக வாதாடி உள்ளார். குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தபோது, அவரது அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்துள்ளார்.