தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல்காந்தி கேள்வி + "||" + Why does the Minister of Defense go to France when the Supreme Court has asked for an explanation? - Rahulkanthi question

சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல்காந்தி கேள்வி

சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில் ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக? - ராகுல்காந்தி கேள்வி
சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ள நிலையில், ராணுவ மந்திரி பிரான்ஸ் செல்வது எதற்காக என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனின் 3 நாள் பிரான்ஸ் பயணத்தை, ரபேல் போர் விமானம் வாங்குவதுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ராணுவ மந்திரி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் உண்மையில் மிகவும் எளிமையானது. பிரதமர்தான் இதில் முடிவெடுத்தார். எனவே கோர்ட்டு கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே ராணுவ மந்திரி இன்றிரவு(நேற்று இரவு) பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.


நிர்மலா சீதாராமன் தனது பிரான்ஸ் பயணத்தின்போது அந்நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றார்
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்று கொண்டார்.
2. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி: பிரெட் கவனாக் செனட் ஓட்டெடுப்பில் வெற்றி
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு செனட் ஓட்டெடுப்பில் பிரெட் கவனாக் வெற்றி பெற்று மயிரிழையில் தப்பினார்.
3. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகி தீக்குளிக்க முயன்றார். அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் அய்யப்ப பக்தர்கள் அதிர்ச்சி - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
‘சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
5. சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை