தேசிய செய்திகள்

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு: கேரளாவில் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் ஊர்வலம் + "||" + Opposition to allow all women to Sabarimala: The BJP's coalition party in Kerala is a rally

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு: கேரளாவில் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் ஊர்வலம்

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு: கேரளாவில் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் ஊர்வலம்
சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கூட்டணி கட்சியினர் சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ஒரு சில பெண் அமைப்புகள் வரவேற்றாலும், பெரும் எதிர்ப்பும் உள்ளது.


சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சபரிமலையின் ஆகம விதிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்தளம் முதல் திருவனந்தபுரம் வரை சபரிமலை பாதுகாப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.

ஊர்வலத்தை மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தொடங்கிவைத்தார். இதில் பா.ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்த துஷார் வெள்ளாப்பள்ளி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள், அய்யப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மாலையில் அடூர் வந்து சேர்ந்தது. இந்த ஊர்வலம் காயங்குளம், கொல்லம், ஆற்றிங்கல் வழியாக வருகிற 15-ந் தேதி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் வந்து சேரும்.

இதைப்போலவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சபரிமலை பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று ஊர்வலங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டது.

சபரிமலையின் ஆகம விதிகளை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று நாயர் சர்வீஸ் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் பிரமாண்ட பேரணி-கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. பாளையம் கணபதி கோவிலில் தொடங்கிய பேரணி தலைமைச்செயலக சாலை வழியாக மீண்டும் பாளையம் ரத்த சாட்சி மண்டபம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து அங்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

கூட்டு பிரார்த்தனையினை சங்க திருவனந்தபுரம் தாலுகா தலைவர் எம்.சங்கீத்குமார் தொடங்கிவைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் சபரிமலை ஆகம விதிகளை பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து புரோகித சமாஜத்தை சேர்ந்த புரோகிதர்கள் திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்
சபரிமலைக்கு செல்ல பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.
2. சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர இளம்பெண்கள் 4 பேரை போலீசார் திருப்பி அனுப்பினர்
சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
3. பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்யவில்லை - சபரிமலை கோவில் தந்திரி விளக்கம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 2–ந்தேதி 50 வயதுக்குட்பட்ட கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்று கோவில் தந்திரி சன்னிதானத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜை செய்ததாக கூறப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு கொலை மிரட்டல்
சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
5. பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி மருத்துவமனையில் அனுமதி
திருக்குவளையில், பள்ளி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.