உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு + "||" + Tsunami threat as 7.0-magnitude quake hits Papua New Guinea

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
போர்ட் மோர்ஸ்பை :

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.