தேசிய செய்திகள்

டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கரையை கடந்தது + "||" + Cyclone Titli Hits Odisha's Gopalpur

டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கரையை கடந்தது

டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே,  கரையை கடந்தது
டிட்லி" புயல் தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா - ஆந்திரா இடையே, கோபால்பூரில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது
புவனேஷ்வர்,

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், கோபால்பூருக்கும் (ஒடிஸா), கலிங்கப்பட்டினத்துக்கும் (ஆந்திரம்) இடையே இன்று காலை கரையைக்கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மரங்கள் முறிந்து விழுந்தன. புயலின் தாக்கம் அடுத்த மூன்று முதல் நான்கு  மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக புயல் எச்சரிக்க விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஒடிஸாவின் கடலோர மாவட்டங்களான புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும், ஒடிஸா, ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு 1,000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது. ஒடிஸாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிப்பு; ஒடிசாவில் வெள்ளம், நிவாரணப் பணிகளில் அரசு தீவிரம்
ஒடிசாவில் தித்லி புயலால் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2. வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
தந்திராயன்குப்பம் கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. ஒடிசாவை தாக்கியது தையே புயல்: கனமழை, மல்கங்கிரி மாவட்டம் கடுமையாக பாதிப்பு
ஒடிசாவை தையே புயல் தாக்கியது. புயல் கரையை கடந்ததால், மாநிலத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
4. வர்றாங்க.. வாசிக்கிறாங்க..
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி போதிக்கும் நோக்கத்தில் நடமாடும் நூலகத்தை நடத்துகிறார்கள்.
5. ஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
ஒடிசா மாநில கவர்னராக இருந்த எஸ்.சி.ஜமீரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, பீகார் கவர்னர் சத்யபால் மாலிக், ஒடிசா மாநில கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை