தேசிய செய்திகள்

தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி + "||" + petrol price raise continiously

தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி

தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று அச்சம் ஏற்பட்டது. எரிபொருட்கள் விலை உயர்வால் லாரிகளின் வாடகைகள் உயர்ந்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கடும் அதிருப்தியை அளித்த நிலையில், விலை குறைக்கும் முயற்சியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அண்மையில் ரூ.2.50 குறைத்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து எண்ணைய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. இது வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.85.61 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 78.90 ஆகவும் விற்பனையாகிறது. 



தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலையில் இன்று மாற்றம் இல்லை, டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலை 26 காசுகள் அதிகரித்துள்ளது.
2. தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை, வாகன ஓட்டிகள் கவலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை: தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு - எடப்பாடி பழனிசாமி
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை - பொதுமக்கள் கோரிக்கை
பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
5. டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டீசல்விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ராமநாதபுரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.