உலக செய்திகள்

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு + "||" + Dassault 'freely' chose Reliance for Rafale partnership

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு

ரபேல் ஒப்பந்த சர்ச்சை: குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் வெளியான புதிய குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாரிஸ்,

ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரத்தை வருகிற 29-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

இந்த பேரத்தில் ‘ரபேல்’ போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்கிடையில்,  பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட்  பத்திரிகை டசால்ட் நிறுவனத்துடன் இந்திய அரசு மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக என மீடியா பார்ட் கூறியுள்ளது. 

ஏற்கனவே, பிரான்சு முன்னாள் அதிபர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்த நிலையில், பிரான்சு புலனாய்வு பத்திரிகை செய்தியால் இவ்விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கு மேலும் தீனி போட்டது. 

இந்நிலையில், மீடியா பார்ட் பத்திரிக்கை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாசால்ட் ரிலையன்ஸ் எரோஸ்பேஸ் லிமிட்டடு (DRAL) பிப்ரவரி மாதம் 2017-ல் துவங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.