உலக செய்திகள்

பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களில் சீனாவின் தலையீடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் - சர்வதேச நிதியம் + "||" + IMF warns Pakistan against excessive loans from China

பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களில் சீனாவின் தலையீடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் - சர்வதேச நிதியம்

பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களில் சீனாவின் தலையீடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் - சர்வதேச நிதியம்
பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களில் சீனாவின் தலையீடு அதிகரிப்பது பிற்காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.
பாலி,

பாலியில் நடந்த சர்வதேச நிதியம்  மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பேசும் போது, 

பாகிஸ்தான் இன்னும் முறையாக நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்திடம் அணுகவில்லை,   பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தால், பாகிஸ்தான் அதன் முழு திறனை அடைவதற்கு உதவுவதாக செவ்வாயன்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் தற்போது பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்க தயங்குவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான நட்பில் விரிசல் ஏற்பட்ட நிலையில் சீனாவுடன் நெருங்கி வரும் பாகிஸ்தான் அந்நாட்டின் உதவியுடன் "சில்க் ரோடு" திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

பாகிஸ்தானின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையில் ஏற்கனவே சீனா பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் மீண்டும் சீனாவிடம் கடன் கேட்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாம்: பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது தெற்காசியா அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
2. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றது. மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியும் எழுச்சி பெற்றுள்ளது.
3. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்
பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
4. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
5. இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறை நடத்தப்படும்; பாகிஸ்தான் எச்சரிக்கை
இந்தியா எங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.