மாநில செய்திகள்

தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம் + "||" + Dinakaran has started a separate partyHe and us have no relation O. PaneerSelvam

தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்

தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்
தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். #TTVDhinakaran #AIADMK
சென்னை,

 ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்  உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும் போது சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போது   தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. அ. தி.மு.கவில் சசிகலா உறுப்பினர் கிடையாது. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறினார்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும் போது  துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.

சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா என கூறினார்

பின்னர்  பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.  தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டார்- அமைச்சர் தங்கமணி
அதிமுகவுடன் இணைய தினகரன் 2 மாதத்திற்கு முன் தூதுவிட்டார், அதை ஏற்காததால் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார் என அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.
2. தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் எதுவும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.
3. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் ’நியூஸ் ஜெ’ 12 ந்தேதி சோதனை ஓட்டம் தொடக்கம்
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ புதிய சேனல் நியூஸ் ஜெ சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். #NewsJ #AIADMK
4. அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது- ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது, அதை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என துணை முதல்-அமைச்சர் ஓபன்னீர் செல்வம் கூறினார். #AIADMK #OPanneerselvam
5. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மணக்க இருந்த மணப்பெண் மாயம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனை மணக்க இருந்த மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK