தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி + "||" + I would like to clearly tell the youth of the country that the Prime Minister of India is a corrupt man: Rahul Gandhi #RafaleDeal

நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி

நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி
நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்வது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரத்தை வருகிற 29-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

இந்த பேரத்தில் ‘ரபேல்’ போர் விமானங்களுக்கு விலையை நிர்ணயம் செய்ததிலும், விமானங்களை தயாரித்து வழங்குவதில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக சேர்த்ததிலும் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், 3 நாள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேவை சந்தித்து பேசுகிறார். அப்போது, ரபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்தும் அந்நாட்டு அரசுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும் போது, “ ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் இந்திய பிரதமர் கூறியதாக பிரான்சு முன்னாள் அதிபர் முன்பு கூறினார். தற்போது, மூத்த அதிகாரி ஒருவரையும் இதையே தெரிவித்துள்ளார். எனவே, இதில் ஊழல் விவகாரம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஏன்? அவசர அவசரமாக ரபேல் தொழிற்சாலைக்கு செல்கிறார்? இதில் ஏன் அவசரம்? நாட்டின் பிரதமர் ஒரு ஊழல் கறைபடிந்தவர் என்பதை நாட்டு இளைஞர்களுக்கு நான் சொல்லிகொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முன்னதாக ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: “ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு இனிமேல்தான் காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. பிரதமரின் முடிவை நியாயப்படுத்தவே நிர்மலா சீதாராமன் அவசரமாக பிரான்ஸ் சென்றுள்ளார்’’ என்று தெரிவித்து இருந்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளது : ராகுல் காந்தி கருத்து
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
2. டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை
டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
3. இந்துத்துவா பற்றிய அறிவு; ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி
இந்துத்துவா பற்றி ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு கூட முழுமையான அறிவு இருந்ததில்லை என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
4. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் : ராகுல் காந்தி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில் மோடி தோல்வி அடைந்து விட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
5. சர்ச்சை அதிகரித்த நிலையில் ராகுல் காந்திதான் என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பினார் - சித்து
பாகிஸ்தான் பயணம் தொடர்பாக சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில் ராகுல் காந்திதான் என்னை அனுப்பினார் என்று சித்து கூறியுள்ளது மேலும் சர்ச்சை அதிகரிக்க செய்துள்ளது.