தேசிய செய்திகள்

பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு + "||" + Delhi's Patiala House Court orders attachment of Vijay Mallya’s Bengaluru properties

பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார். 

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.

இந்தநிலையில், விஜய் மல்லையா மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய  உத்தரவு பிறப்பித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது: விஜய் மல்லையா
பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
2. விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.
3. விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது: நிதின் கட்காரி விளக்கம்
விஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
4. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தப்பி ஓடவில்லை என்றால் 300 பைகளுடன் விஜய் மல்லையா சென்றது ஏன்? கோர்ட்டில் அமலாக்கத்துறை வக்கீல் கேள்வி
வங்கிக்கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்குகளுக்கான மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.