தேசிய செய்திகள்

2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு + "||" + Rampal case verdict LIVE updates: Self-styled godman held guilty in both cases of murder, quantum of punishment on October 16 and 17

2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு

2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பால்  குற்றவாளி என தீர்ப்பு
2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு. தண்டனை குறித்து 16 அல்லது 17 ந்தேதி அறிவிக்கப்படுகிறது.
அரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ளது அவரது ஆசிரமம். 

நவம்பர் 19, 2014 அன்று சாமியாரின்  ஆசிரமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம்பால் மற்றும் அவரது  ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 2018 ல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது  இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலைகள்  தொடர்பான  வழக்கில் சாமியார் ராம்பால்  கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். 

ராம்பால் கைதானதை தொடர்ந்து போலீஸாருக்கும் சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார் செய்த கொலைகள் தொடர்பான வழக்கு  ஹிஸார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த   வழக்குகளில்  சாமியார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளது . தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேரிடம்   நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் ஒரு வழக்கில் சாமியார் ராம்பால், 13 ஆதரவாளர்களுக்கு ஆயுள் சிறை
அரியானா மாநிலம், பர்வாலா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில் 2 பெண்களை கொலை செய்த வழக்கில் சாமியார் ராம்பாலுக்கும், அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கும் ஆயுள் சிறைத்தண்டனை விதித்து ஹிசார் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.