தேசிய செய்திகள்

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒரு அழுத்தமாக இருக்காது - ரஷ்ய தூதர் + "||" + USA's CAATSA sanctions will not be a pressure between India-Russia defence deals- Russian Ambassador to India Nikolay Kudashev

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒரு அழுத்தமாக இருக்காது - ரஷ்ய தூதர்

அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு ஒரு அழுத்தமாக இருக்காது - ரஷ்ய தூதர்
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு இடையே ஒரு அழுத்தமாக இருக்காது என இந்தியாவின் ரஷ்ய தூதர் கூறி உள்ளார்.
புதுடெல்லி,
 
இந்தியாவின் ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் கூறியதாவது:-

இந்தியாவில்  ஜனாதிபதி புதினின் பயணத்தின்  போது இரு தரப்பினரும் பொதுவான முன்னுரிமைப் பகுதியை அடையாளம் காணவும், CAATSA (அமெரிக்க பொருளாதாரத் தடைகள்) போன்ற கணிக்க முடியாத காரணிகளிலிருந்து தங்களது வர்த்தக உறவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று விவாதித்தனர்.

அமெரிக்க பொருளாதாரத்   (CAATSA) தடைகள் இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு இடையே ஒரு அழுத்தமாக  இருக்காது. 2-3 மாதங்களில் நீங்கள் ஃப்ரீயேட்ஸ் மற்றும் கலஸ்னிகோவ்ஸில் ஒப்பந்தங்களைக் காண்பீர்கள் என  இந்தியாவின் ரஷ்ய தூதர் நிகோலாய் குடாஷேவ் கூறி உள்ளார்.

ஐந்தாவது தலைமுறை போர் விமானம் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.  ஆனால் தற்போது இந்தியாவின் முன்னுரிமை S400, போர் விமானம், ஹெலிகாப்டர், தாக்குதல் துப்பாக்கிகள் தான். ஆனால் (FGFA) ஐந்தாவது தலைமுறை போர் விமானம் ஒப்பந்தம் மீண்டும் மிக விரைவில் இருக்கும் என கூறி உள்ளார்.