மாநில செய்திகள்

தாய் மொழிதான், நம்மை உயர்த்தும் : கல்லூரி விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு + "||" + The mother tongue will raise us

தாய் மொழிதான், நம்மை உயர்த்தும் : கல்லூரி விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

தாய் மொழிதான், நம்மை உயர்த்தும் : கல்லூரி விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, 

தாய் மொழிதான், நம்மை உயர்த்தும். தாய்மொழி, தாய் நாடு, பிறந்த ஊர் உள்ளிட்டவற்றை என்றென்றும் மறக்கக் கூடாது. மேற்கத்திய கலாச்சார மோகத்தால் நமது நாட்டு வரலாற்றை மறந்து வருகிறோம்.  வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்றோரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன, இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகாரமிக்கவர்களாக மாற வேண்டும். கணக்கில் வராத பணத்தை வைத்திருந்தால் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது.

இவ்வாறு அவர் பேசினார்.