தேசிய செய்திகள்

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் + "||" + AndhraPradesh: 8 people have died in Srikakulam and Vijayanagaram districts due to CycloneTitli

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம்

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம்
தித்லி புயலால் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்,

வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி  ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.  

இந்தநிலையில் தித்லி புயாலால் ஆந்திரத்தின் விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னைகளும் வாழைகளும் முறிந்தும் சாய்ந்தும் விழுந்தன.  எலுமிச்சை, மாமரம் உள்ளிட்ட மரங்களும் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  2 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.   தித்லி புயலுக்கு விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில்  8 பேர் உயிரிழந்தனர். 

புயல் காரணமாகக் கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரங்களில் உள்ள சாலைகள் புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளது.  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.