மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்-போக்குவரத்து துறை அமைச்சர் + "||" + In Chennai for Diwali festival 30 booking centers will operate Transport Minister

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்-போக்குவரத்து துறை அமைச்சர்

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்-போக்குவரத்து துறை அமைச்சர்
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
சென்னை

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.