மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் + "||" + Since November 1st Diwali special buses start booking Minister MR Vijayabaskar

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MRVijayabhaskar
சென்னை,

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும்.

சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளிக்கு கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை. ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

மாணவர்களுக்கு பஸ் பாஸ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். இவற்றில் சென்னையில் 80-ம், கோவையில் 20-ம் இயக்கப்படும் என கூறினார்.