மாநில செய்திகள்

அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம் + "||" + North-East monsoon is likely to start after October 15 - Weather Center

அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம்

அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது - வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:

இன்று அதிகாலை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதியில் கரையை கடந்த அதி தீவிர டிட்லி புயலானது தற்போது தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் கங்கை சமவெளி பகுதியில் நிலை கொண்டுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையுமென்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள வானிலை மையம், 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.  சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நாகர்கோவிலில் 5 செ.மீ, அரியலூர், திருவள்ளூர், முத்துப்பேட்டை, தஞ்சை, மதுக்கூர் பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை -சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
4. தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.