உலக செய்திகள்

ரபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் தலையீடு கிடையாது - நிர்மலா சீத்தாராமன் + "||" + Nirmala Sitharaman says government was not involved in picking Reliance for Rafale jet

ரபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் தலையீடு கிடையாது - நிர்மலா சீத்தாராமன்

ரபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் தலையீடு கிடையாது - நிர்மலா சீத்தாராமன்
ரபேல் விமான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் தலையீடு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
பாரீஸ்:

ரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்தார்.

பின்னர் ரபேல் விமான தயாரிப்பு ஆலைக்கு சென்றார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் கூறியதாவது: .

ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது. இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரசுக்கு ராஜ்நாத் சிங் பதில்
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மை ஆகிவிடாது என நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.