தேசிய செய்திகள்

வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு + "||" + Chief Justice of India Ranjan Gogoi bans leave for judges on working days to fight massive backlog of cases

வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு

வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு
வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அண்மையில் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்கக்கூடாது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வார நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுப்ரீம்கோர்ட்டில் மட்டும் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேபோல் நாட்டில் உள்ள 24 மாநிலங்களின் ஐகோர்ட்டுகளில்  சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதிகளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றை விசாரித்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீதிமன்றங்கள் உள்ளன. இந்நிலையில் நீதித்துறை பணிச்சுமையில் இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என அனைத்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரை, இரவில் 9 மணி முதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2. பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு உறுதி
தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
3. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்
சுப்ரீம் கோர்ட் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார் . ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #JusticeRanjanGogoi
4. நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி
நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது.
5. அரசு பதவி உயர்வில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்
அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டியதில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.