மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி + "||" + Stalino TTV DHinakarano Do not run me After Stalin's meeting Karunas interview

மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின் கருணாஸ் பேட்டி

மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை : ஸ்டாலின் சந்திப்புக்கு பின்  கருணாஸ் பேட்டி
இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கருணாஸ் எம்.எல்.ஏ சந்தித்தார். பின்னர் மு.க,ஸ்டாலினோ , டி.டி.வி. தினகரனோ என்னை இயக்கவில்லை என கூறினார்.
சென்னை,

முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.

தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.

இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர்.

சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது. என் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்
கட்சி பதிவு செய்யப்படவில்லை என்பதால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
2. அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.
4. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை: டிடிவி தினகரன்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
5. ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை; அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்- டிடிவி தினகரன் ஆதரவாளர்
ஜெயக்குமார் பற்றிய ஆடியோ, வீடியோ உள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சொல்லமாட்டோம் என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.