மாநில செய்திகள்

ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் : தமிழிசை சௌந்தரராஜன் + "||" + The death of IAS Academy Shankar

ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் : தமிழிசை சௌந்தரராஜன்

ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் :  தமிழிசை சௌந்தரராஜன்
ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இந்த மையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சங்கர் நேற்று இரவு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு  சங்கரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ஐஏஎஸ் அகாடமி மூலம் 900 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கியவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர்.
தென்னாட்டு ஏழை, நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப் பயணம் நம்மை வருத்துகிறது. ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மறைவுக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.