தேசிய செய்திகள்

இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் - வெங்கையா நாயுடு + "||" + Become the 3rd largest economy - Venkaiah Naidu

இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் - வெங்கையா நாயுடு

இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் - வெங்கையா நாயுடு
இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
புதுச்சேரி,

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா  நடைபெறது. இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். 

பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:

பிரதமர் மோடியின் 3 மந்திரங்களான சீர்சிருத்தம், செயல்பாடு, மாற்றத்தை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.  மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படித்து முடித்து எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் நமது நாட்டிற்கு செய்யும் கடமையை செய்யுங்கள்.

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மதம், மொழி,கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவர் இந்தியர்.

இவ்வாறு அவர் கூறினார்.